About Us

WHO WE ARE

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆசிகளுடன் வேளச்சேரி அறக்கட்டளை ஆன்ம ஒளி தவமையமாக 1998ஆம் அண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. டாக்டர் எம்.ஆர்.தனசேகர் அவர்களின் முயற்சியோடு அவர்களது வேளச்சேரி இல்லத்திலேயே நடைபெற்று வந்தது. ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அருள்நிதி மீரா முத்துசாமி அருள்நிதி முத்துசாமி அவர்களது ஆதரவோடு அவர்களின் இல்ல மாடியில் மாற்றப்பட்டது. திருவெற்றியூர் அறக்கட்டளையின் தவ மையமாக பேரா.கலா ஆசைத்தம்பி அ.நி.ஆசைத்தம்பி அவர்களின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பெற்றது. ஆரம்ப கால நிதியர்கள் அருள்நிதி இளங்கோ, அருள்நிதி வளர்மதி, அருள்நிதி செந்தூர்ராஜன், கனா காளியப்பன், அருள்நிதி செல்வராஜ், அருள்நிதி வீராசாமி, அருள்நிதி இராமநாதன். அருள்நிதி தியாகராஜன் இவர்களின் துணையோடு தொடங்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து அருள்நிதி திருநாவுக்கரசு அய்யா. அருள்நிதி நாச்சியப்பன், அருள்நிதி, மீனாட்சி நாச்சியப்பன், அருள்நிதி சந்திரன், அருள்நிதி சிவலிங்கம், சுந்தரம், கோமதி (தனசேகரன் அய்யா அவர்களின் மனைவி), மைதிலி தீனதயாளன், வள்ளிநாயகி, வடிவாம்பாள், உமாஸ்ரீகாந்த், கோதை கோவிந்தராஜன், அருள்நிதி கௌரி மற்றும் அருள்நிதி இராணி இவர்களின் கூடுதல் தொண்டோடு இந்த மையம் வளர்ச்சிப் பெற்றது. தவமைய நிறுவனர் டாக்டர் எம்.ஆர்.தனசேகர் மையத்தின் कनक (Founder Trustees) அருள்நிதி செந்தூர்ராஜன், அருள்நிதி கணா காளியப்பன், அருள்நிதி செல்வராஜ், அருள்நிதி வீராசாமி, அருள்நிதி மீரா முத்துசாமி நியமிக்கப்பட்டனர்.

வேளச்சேரி ஆன்மஒளி தவமையம் அறக்கட்டளையாக உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு 2000. இதன் தொடக்க விழா 3.12.2000இல் குருநானக் கல்லூரியில் அன்றைய உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் பேரா.அருளானந்தன் அய்யா அருள்நிதி கலா ஆசைத்தம்பி, அருள்நிதி ஆசைத்தம்பி, இராஜலெட்சுமி பள்ளியின் தாளாளர் திரு.பழனிச்சாமி, திரு வீரபத்திரன் ஆகியோரின் வாழ்த்துகளோடு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது அன்றைய செய்தி தாள்களிலும் செய்தியாக வந்தது என்பதும் குறிப்பிடதக்கது

வேளச்சேரி ஆன்மஒளி தவமையம் அறக்கட்டளையாக உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு 2000. இதன் தொடக்க விழா 3.12.2000இல் குருநானக் கல்லூரியில் அன்றைய உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் பேரா.அருளானந்தன் அய்யா அருள்நிதி கலா ஆசைத்தம்பி, அருள்நிதி ஆசைத்தம்பி, இராஜலெட்சுமி பள்ளியின் தாளாளர் திரு.பழனிச்சாமி, திரு வீரபத்திரன் ஆகியோரின் வாழ்த்துகளோடு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது அன்றைய செய்தி தாள்களிலும் செய்தியாக வந்தது என்பதும் குறிப்பிடதக்கது.

02.09.2001இல் வேளச்சேரி மர்பி பள்ளியில் விஜய நகர் தவ மையம் தொடங்கப்பட்டது. முதுநிலை பேரா. எல்லப்பன் அய்யா அவர்கள் தலைமையில் பின் அருள்நிதி கமலா அம்மா (மர்பி பள்ளி முதல்வர்) வீட்டு மாடியில் விஜயநகர் தவ மையமாக தொடர்ந்து நடத்தப்பட்டது. இரண்டாவது தவமையம் அன்னை இந்திரா நகர் நலவாழ்வு சங்கம் சார்பாக அ.நி.எல்லப்பன் அய்யா தலைமையில் தொடங்கப்பட்டது. அது அருள்நிதி தனசேகரி அம்மா அவர்களின் வீட்டு மாடியில் மாற்றப்பட்டு இன்றுவரை தொடர்ந்து இயங்கிக் கொண்டுள்ளது. அதே ஆண்டு பள்ளிக்கரணையிலும் 3வது தவ மையம் அருள்நிதி இராணி அம்மா அவர்களின் வீட்டு மாடியில் தொடங்கப்பட்டது. 2004 இல் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மர்பி சிறுவர் பள்ளியில் தவக்கூடமாக பயிற்சி கொடுக்கப்பட்டது. அருட்தந்தை மகரிஷி அவர்களின் நல்லாசியுடன் தரமணி எம்.ஜி.ஆர். தெருவில் திருமதி அலமேலு அம்மாள் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று அவர்களது இல்லத்தில் தவமையம் ஒன்றினை அமைத்து அதை வேளச்சேரி அறக்கட்டளையுடன் 24.11.2013 அன்று இணைக்கப்பட்டது. இதன் பொறுப்பாசிரியராக து.பேரா.கோபிசந்த இணைப் பொறுப் பாசிரியராக திருமதி பி.யசோதா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அருட்தந்தை மகரிஷி அவர்களின் நல்லாசியுடன் பள்ளிக்கரணை பேரா.அன்பரசன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 24.11.2015 பள்ளிக்கரணை காமக்கோடி நகர் முதல் தெருவில் தவமையம் தொடங்கப்பட்டு அறக்கட்டளையுடன் இணைக்கப் பட்டது. பேரா.க.அன்பரசன் அவர்கள் பொறுப்பாசிரியராகவும் திருமதி அன்பரசன் அவர்கள் இணைப்பொறுப்பாசிரியராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

தற்போது இயங்கிவரும் தவமையங்கள் அதன் பொறுப்பாளர்கள்

  • அன்னை இந்திராநகர் தவமையம் – பேரா.தனசேகரி
  • சசிநகர் தவமையம் (பாலாஜிநகர்)
    அருள்நிதி பாரிவள்ளல்
  • கானகம் ஸ்கையோகா மையம் திரு.சந்தானகிருஷ்ணன்
    முதல் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி செந்தூர்ராஜன் அவர்கள்
  • இரண்டாவது நிர்வாக அறங்காவலர் அருள்நிதி முத்துசாமி அவர்கள்
  • மூன்றாவது நிர்வாக அறங்காவலர் அருள்நிதி வடிவாம்பாள் அவர்கள்
  • நான்வது நிர்வாக அறங்காவலர் அருள்நிதி வீராசாமி அவர்கள்
  • 5வது நிர்வாக அறங்காவலராக அருள்நிதி ச ஞானசம்பந்தன் அவர்கள்
  • 6வது நிர்வாக அறங்காவலராக s. சார்லஸ் அவர்கள் மே 2024 முதல் அருளதொண்டினை வழங்கி வருகிறார்கள்

அது போலவே முதல் பொறுப்பாசிரியராக

அருள்நிதி டாக்டர் எம்.ஆர்.தனசேகர் அவர்களும்

இரண்டாவது பொறுப்பாசிரியராக அருள்நிதி கணா காளியப்பன் அம்மா அவர்களும்,

மூன்றாவதாக அருள்நிதி வீராசாமி அவர்களும்

நான்காவது பொறுப்பாசிரியராக அருள்நிதி சங்கர் அவர்களும்

5வது பொறுப்பாசிரியராக அருள்நிதி நாராயணன் அவர்களும்

6வது பொறுப்பாசரியராக அருள்நிதி சார்லஸ் அவர்களும்

7வது மற்றும் தொடர்ந்து பொறுப்பாசிரியராக

அருள்நிதி தயாளன் அவர்களும்

இந்த அறக்கட்டளையில் அருட்பணி செய்து வருகிறார்கள்.

 

ஆழியார் அறிவுத்திருக்கோயில் விஷன் கல்விப்பிரிவு (Vision for Wisdom) வழங்கும் விஷன் கல்வி தொடங்கப்பட்ட ஆண்டு 2010. இதன் முதல் திட்ட அலுவலராக அருள்நிதி கோதை கோவிந்தராஜன் அவர்களும் அவரைத் தொடர்ந்து அருள்நதி பி.செந்தூர்ராஜன் அய்யா அவர்களும் அருட்பணி செய்துள்ளார்கள். தற்போது அருள்நிதி உமாபரமேஸ்வரி அவர்கள் திட்ட அலுவலராக அருட்பணி யினை செய்து வருகிறார்கள்.

மாணவர்களுக்கான யோகமும் இளைஞர் வல்லமையும் (Yoga for Youth Empowerment) என்ற பயிற்சி வகுப்பினை வேளச்சேரி மற்றும் அருகில் உள்ள பள்ளிகளில் அளித்து வருகிறோம். அவற்றில் சில பள்ளிகள்

  • வேளச்சேரி அரசு மேனிலைப் பள்ளி
  • சென்னை மாநகராட்சி மேனிலைப் பள்ளி, மடுவின்கரை
  • தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக், தரமணி.
  • குருநானக் கல்லூரி (தன்னாட்சி), வேளச்சேரி
  • ஜெயபாலன் பெண்கள் கல்லூரி
  • இமயம் பள்ளி, சுண்ணாம்பு குளத்தூர்.
  • NIOT, Pallikaranai, Chennai 600100
  • St. Thoma Middle School, Madipakkam Kaiveli, Chennai
  • University of Madras, Guindy Campus & Taramani Campus
  • நந்தனம் அரசு கலைக்கல்லூரி, நந்தனம்
  • Institute of Hotel Management & Catering College, Taramani*
  • Bether Matriculation School, Sarathi Na- gar, Velachery*
  • DAVe Baba Vidyalaya. Vandikaran Street, West Velachery*
  • Aruljyothi Middle School. Tansi Nagar Velachery*

*குறியிட்ட பள்ளிகளில் தொடர்ந்து வருடம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

வேளச்சேரி அறக்கட்டளை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 21.12.2013 மனவளக்கலை பயிற்சி மையம் அன்றைய தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மூ.இராசாராம் IAS, அவர்களால் தொடங்கப்பட்டது. வேளச்சேரி அறக்கட்டளை சார்பில் சென்னை மண்டலத்தோடு இணைந்து கிராமிய சேவைத் திட்டம் 09.07.2022 அன்று பெருங்குடி சித்தர் நாகமணி அடிகளார் திருக்கோயில் வளாகத்தில் தொடங்கப்பெற்று 17.12.2022 அன்று சிறப்பாக நிறைவு பெற்றது. 300க்கும் மேற்பட்டோர் இக்கிராமிய சேவைத் திட்டத்தின் வழியாக பயனடைந்துள்ளர்.

0
academic textbooks
0
+
MVKM Trusts
0
+
Meditation Centres
0
Dedicated
Employs
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× How can I help you?